டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தாவிற்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து, யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.