கனடா தேசிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங், தேர்தலில் தோல்வியடைந்து பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். இதனையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் NDP கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறைந்த பட்சம் 12 ஆசனங்களைப் பெறத் தவறியதால் கட்சியின் அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும் இழந்தது. இதனால் ஜக்மீத் சிங், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.