ஆரம்பத்தில் தலைவர் பிரபாகரன் MGR ஐ விரும்பவில்லை. அவர் அமைப்பின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவமாட்டார் என்று நினைத்திருந்தார் என வைகோ கூறியுள்ளார்.
அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணலின் போது, ஆனால் ஒரு சமயத்தில் அவரை சந்தித்து புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவி கோரலாம் என்று சென்றோம். ஆனால் உதவி செய்வார் என் நம்பிக்கை துளியளவும் இருக்கவில்லை.
தயக்கத்துடன் அவரிடம் சென்று அமைப்பின் வளர்ச்சிக்காக இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி கோரினோம் கேட்ட வேலையில் ஐம்பது இலட்சத்தையும் அன்றைய தினம் மாலை மற்றுமொரு ஐம்பது இலட்சத்தையும் அள்ளிக்கொடுத்தார்.
பின்பு மிகுதி ஒரு கோடி ரூபாவையும் வழங்கினார். அப்போது தலைவர் பிரபாகரன், இது உண்மையான நிகழ்வா இது! எனக்கு தலைச்சுற்றி வருவதை போல் இருக்கிறது என்று கூறியதாக வைகோ மேலும் கூறியுள்ளார்.