கொரோனா தொற்றுக்காலத்தில் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நைஜீரியா கடனாகப்பெற்றுக்கொண்ட 3.4 பில்லியன் அமெரிக்க டொலரை முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் நிலுவையில் உள்ள கடன்களை முழுமையாகத் தீர்த்ததைத் தொடர்ந்து, நைஜீரியாவை கடன்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
உலகளாவிய சுகாதார நெருக்கடி மற்றும் சரிந்து வரும் எண்ணெய் விலைகளின் நிலைமைகளை சமாளிப்பதற்காகவே இந்தக் கடன் பெறப்பட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்பட்டிருக்காத நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், சீனா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் நைஜீரியாவும் தற்போது இணைகிறது.