ஆக்ஸிலேட்டரை முறுக்கினால் அட்ரினல் அழுத்தத்தை அதிகரிக்கும் விறுவிறுப்பான விளையாட்டு பைக் ரேஸ். திரில்லிங்கிற்கு பஞ்சம் இல்லாதது பைக் சாகசம். விறுவிறுப்பு, திரில்லிங் என இரண்டும் கலந்தது தான் ஆஃப் ரோடு பைக் ரேஸ். இதில் சாதாரணமாகச் சாலைகளில் செல்வது போல வண்டியை எடுத்தவுடன் பயணித்து விட முடியாது.
ஆனால் ஆஃப் ரோடு ட்ராக்கில் பைக்கில் சீறிச் சென்று காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இந்த சின்னஞ்சிறு பாலகன்… நாமெல்லாம் 8 வயதில் பொம்மை பைக், கார் போன்றவற்றைக் கொண்டு விளையாடியிருப்போம். கோவையைச் சேர்ந்த 8 வயதான ரிதின் சாய் என்ற சிறுவன் பைக் ரேஸில் 7 உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
இது குறித்து ரிதின் சாய் கூறுகையில், “நான் SNV குளோபல் ஸ்கூல்ல படிக்கிறேன். இதுவரைக்கும் நான் 9 நேஷனல் ஈவன்ட் ஓட்டி இருக்கிறேன். 1 இன்டர்நேஷனல் போட்டியில் ஓட்டியிருக்கிறேன். கலாம் வேர்ல்டு ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட், இன்ஃப்ளுயன்ஸ் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட், சூப்பர் டேலண்டர் கிட், இன்ஃப்ளுயன்சர் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளேன்.