பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 34 பேர் காயமடைந்தனர். தம்புத்தேகமவிலிருந்து பதுளைக்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று மாலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் பதுளை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது. நேற்று (20) இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் 177 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஆட்டமிழக்காதிருந்த பங்களாதேஷ் தலைவர் ஷன்டோ 56 ஓட்டங்கள் பெற்றிருக்க, முஷ்பிகுர் ரஹீம் 22 ஓட்டங்களுடன் இருந்திருந்தார். இன்று (21) இந்தப் போட்டியில் இலங்கைக்கு சவால் நிறைந்த வெற்றி […]
பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெராவின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார். வரலாற்று சிறப்புமிக்க எத்கந்த ரஜமகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெரா 1925 ஆம் ஆண்டு தொடங்கியதுடன், இந்த நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் அட்டையும் இங்கு வெளியிடப்பட்டது. எத்கந்த […]
பாதையில் இருந்த சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்

பிரதான பாதைகளில் யாசகம் பெற்று கொண்டிருந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்த 21 சிறுவர்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வு பணியகம், சிறுவர் மற்றும் பெண்கள் பணியக தலைமையகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவை சமீபத்தில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றித் திரியும் சிறுவர்களை காவலில் எடுத்து முறையான பாதுகாப்பில் வைக்க சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்தின. இதற்கமைய கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு […]
முதல் பயணத்தை தொடங்கிய இலங்கை விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்த ஏர் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. விமானம் இன்று பிற்பகல் 01.48 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.இந்த விமானம் இன்று மாலே சர்வதேச விமான நிலையத்திலும் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொடர்பாடல் பிரிவு தலைவர் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துளளார். இந்த புதிய அகலமான உடல் கொண்ட ஏர்பஸ் விமானம் […]
திசைகாட்டி அரசாங்கமும் எரிசக்தி மாபியாவையே முன்கொண்டு செல்கின்றது! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, தற்போதுள்ள எரிபொருள் மாபியாவை மாற்றியமைத்து முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த மாற்றம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. எரிபொருள் ஆற்றல் மாபியாவை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளது. கூரைகளின் மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளுக்கான கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.37 இல் இருந்து ரூ.20 ஆக 45% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. இது சூரிய சக்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை அல்ல. புதுப்பிக்கத்தக்க […]
பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்- பிரதமர்

பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் அனைத்து பாடசாலைகளினதும் ஆசிரியர்கள், உபகரணங்கள் மற்றும் பிற வளங்களை நியாயமான முறையில் அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் ஆராய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட செயற்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார். கல்வி திட்டத்தில் டிஜிட்டல் மயப்படுத்துவது,மற்றும் அதனோடு […]
யாழில் யோகா தினம்!

பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் அதிகமானோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, இந்திய தூதரக உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண பிரதம செயலாளர் , யாழ் மாநகர முதல்வர் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். […]
‘சாரதிகளுக்கு 5 இலட்சம் அபராதம்’- மறுக்கும் இலங்கை பொலிஸ்

மது போதையில் வாகனம் செலுத்துவது கண்டறியப்பட்டால் 500,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இதுபோன்ற சட்ட திருத்தம் அல்லது அமுலாக்க உத்தரவு எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தவறான தகவல்களை உருவாக்கி பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவது இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் பிரிவு மேலும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களின் விசா காலம் நீடிப்பு

இஸ்ரேலில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக , இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியேற்ற ஆணையம் (PIBA), தற்போது நாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விசா காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 12 ஆம் திகதிக்கு பிறகு காலாவதியாகும் B/1 விசாக்கள் மற்றும் பிற பிரிவுகள் உள்ளிட்ட பொது வேலைவாய்ப்பு விசா செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையர்களுக்கு மட்டுமன்றி , இதே […]