தற்போதைய அரசாங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை கூறுகின்றனர். ஆனால், 76 ஆண்டுகளில் அவர்களால் செய்ய முடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைத் தனது சொந்த இன்பத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதற்காக இப்போது சிறைக்கு செல்ல வரிசையில் காத்திருக்கின்றனர்.
எமது அரசாங்கம் அந்த நிலையை மாற்றி, மக்களுக்கு திறைசேரியிலிருந்து உரிய நிவாரணத்தை வழங்கி வருகிறது. எமது பணிகளின் பிரதிபலனை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள்.
அரசாங்கம் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு விரைவில் எமது சேவையின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் போது அவர்களுக்கும் உரிய பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.