டொரண்ரோ நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் $30,000 பெறுமதியான கிட்டத்தட்ட 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 66 வயதுடைய தமிழரான விக்கேஸ்வரராஜா மயில்வாகனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரண்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தெரு மற்றும் வெலெஷ்லி தெரு கிழக்குப் பகுதியில் கடத்தலுக்காக திருடப்பட்ட சொத்தை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே குறித்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டன. இந்த சந்தேக நபர் மதுபானம் கொள்வனவு செய்யும் ஓர் முகவரியும் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை நடத்தப்பட்ட நேரத்தில் $27,000 மதிப்புள்ள சுமார் 500 திருடப்பட்ட மதுபான போத்தல்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.