35 ஆண்டுகளுக்கு பின்னர் யாழில் புகையிரத பொதிகள்சேவை ஆரம்பம்!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அதேவேளை, புகையிரத நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.

நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க