ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் […]

கெரண்டிஎல்ல பஸ் விபத்து – வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு!

கொத்மலை கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்து ஏற்பட்டமைக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பத்தரமுல்ல, சுஹுருபாயவில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ​​விபத்து தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை இதன்போது, பொது மக்கள் […]

கறுப்புப் பட்டி போராட்டத்தை ஆரம்பித்த கம்மன்பில!

சுங்கத்திலிருந்து பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என கறுப்புப் பட்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் பிவிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில. இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, சுங்கத்திலிருந்து பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் உண்மைத் தன்மையை கண்டுப்பிடித்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அவை நிறைவேறும் வரை கறுப்புப் பட்டி அணிந்து போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், […]

ஸ்டார்லிங்க் சேவையை கைவிட முடியாது!

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், எலான் மஸ்கிடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாகவும் கூறினார். தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா!

கேரளா கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த சிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலிலிருந்து சீனாவைச்  சேர்ந்த 8 பேர் உட்பட 18 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்!

கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த சரக்குக் கப்பலில் குளோரோ பார்மைட் , டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஒருவேளை கப்பல் […]

சுதுமலை கோவிலில் 6 பவுன் தங்க நகை திருட்டு!

யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சங்கிலி அறுத்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் […]

கை நடுங்கியதால் கல்யாணம் நின்றது!

மணமேடையில் மணப்பெண்னுக்கு நெற்றியில் குங்குமம் இடுகையில் மணமகனின் கை நடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்தியாவின் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று (10) பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை […]

பொலிஸாரின் கையை கடித்த நபர்!

கேகாலை, ரன்வல பகுதியில் பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்து காயப்படுத்திய சந்தேக நபர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் கேகாலை – ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவ தினத்தில் , கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த […]

யாழ். சட்டத்தரணி தொடர்பில் அவதூறு பரப்பியவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன் , அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந் நிலையில் குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளரை 08 […]