பாதணியோடு நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நுழைந்த பிக்கு!

யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதணிகளை அணிந்து கொண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களும் பௌத்த பிக்குவும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களின் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. அதி உயர் பாரம்பரியங்களுடன் மிக ஒழுக்கமாக பேணப்பட்டு வரும் ஆலய சூழல் மற்றும் ஆலயம் சார் செயற்பாடுகளுக்கு மத்தியில் பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு உள்ளிட்ட சிலர் வருகை தந்தமை பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தமிழர் கலாச்சாரத்தில் மிக பெரியதாக […]

ஜனாதிபதியின் ஜெர்மன் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்!

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (10) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank – Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜெர்மனியின் ஜனாதிபதி, சான்சலர், கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் […]

எமது தரப்பின் கொழும்பு மேயர் வேட்பாளருக்கு எதிரான முறைப்பாட்டில் உண்மையில்லை!

கொழும்பு மாநகர சபை மேயராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்டிருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாட்டிலும் உண்மை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டிருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே […]

தரவரிசையில் 166ஆம் இடத்திலுள்ள தாய்ப்பேயை அதிரவைத்து அபார வெற்றியீட்டியது இலங்கை!

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுகுஊ ஆகிய கிண்ணம் சவூதி அரேபியா 2026க்கான 3ஆவது தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்ட கால்பந்தாட்டப் போட்டியில் சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் 166ஆவது இடத்திலுள்ள சைனீஸ் தாய்ப்பே அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இலங்கை அணி 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக சிநேகபூர்வ போட்டியில் இலங்கை வெற்றிபெற்றுள்ளபோதிலும் சர்வதேச போட்டி ஒன்றில் அவ்வணியை இலங்கை வெற்றிகொண்டது இதுவே […]

பிரிட்டன் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கு நேட்டோ தலைவர் ஆதரவு!

ரஷ்யாவின் புதிய ஏவுகணைகள் சில நிமிடங்களில் மேற்கு ஐரோப்பிய தலைநகரங்களை அடையக்கூடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார் பாதுகாப்பு செலவினங்களை வெகுவாக அதிகரிக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் திட்டத்தை இங்கிலாந்து செயல்படுத்தத் தவறினால், பிரிட்டிஷ் மக்கள் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை நேட்டோ நாடுகளை ரஷ்யா ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதை மேற்கத்திய அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் என்று மாஸ்கோ நிராகரித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம், பிரித்தானிய பிரதமர் […]

100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, 400 தொன் தரமற்ற முருக்கு கம்பிகள் பறிமுதல்!

தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றுக்கு கொண்டு செல்லப்படுவதை திகாரிகளால் கண்டறிந்துள்ளனர். குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பின்தொடர்ந்த அதிகாரிகள் கடந்த 06 ஆம் திகதி அந்தக் களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர். இதன்போது […]

பாடசாலைகளில் இடம்பெறும் பிரச்சினைகளை மூடிமறைக்ககூடாது!

வடக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே ஆளுநர் நா.வேதநாயகன் இதனி கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முறைப்பாட்டுப்பெட்டிகள் அலுவலர்கள் மத்தி , மாகாணம் என்று பிரிந்து செயற்படாமல் எல்லோரும் எமது பிள்ளைகளே என்ற அடிப்படையில் செயற்படவேண்டும். எந்தவொரு விடயமும் […]

தமிழகத்தில் பலத்த மழை – தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 08 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

பேருவளை – மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நேற்று (09) இரவு, பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பொலிஸாருக்கும் பௌத்தக் கொடிகளை ஏற்றி வைத்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே […]

சிவில் உடையில் பொலிஸார் ரகளை!

சிவில் உடை அணிந்திருந்த ஹட்டன் ​பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, உணவகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, உணவகத்தின் உரிமையாளரை அச்சுறுத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. செவ்வாய்க்கிழமை(10) அதிகாலை 1:00 மணியளவில், சிவில் உடை  அணிந்திருந்த ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழு, உணவகத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு, உணவக உரிமையாளரைத் தாக்க முயன்று, உரிமையாளரின் சகோதரியை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் குறித்து ஹட்டன் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் விசாரணையைத் தொடங்கியுள்ளார். பிலியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாடுவதற்காக உணவகத்திற்கு அருகில் […]