அனுதிக்கு அநுர வாழ்த்து!

உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நமது நாட்டையும் மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று […]

மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்!

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இந்தப் பிரச்சினைகளை கோடிட்டு அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தது. மேலும், மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தை அங்கீகரிக்கும் போது அமைச்சரவை வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, இலங்கை அரசாங்கம், பிற நாடுகளிலிருந்து மருந்துகளை நேரடியாகப் பெறுவதற்கான வழிமுறையின் கீழ் ஒரு முறையான குழுவை நியமித்து […]

தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!

மாவட்ட. வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முனனெடுக்கப்பட்டன. குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம் எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத […]

காத்தான்குடியில் தீப்பரவல்!

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான […]

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும்!

இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீதியியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (31) யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் கடற்தொழில் விடயதானங்களின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் […]

76 வருடங்களாகச் செய்யாத பணியை ஆறு மாதங்களில் செய்து முடித்துள்ளோம்!

தற்போதைய அரசாங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை கூறுகின்றனர். ஆனால், 76 ஆண்டுகளில் அவர்களால் செய்ய முடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைத் தனது சொந்த இன்பத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதற்காக இப்போது சிறைக்கு செல்ல வரிசையில் காத்திருக்கின்றனர். எமது அரசாங்கம் அந்த நிலையை மாற்றி, மக்களுக்கு திறைசேரியிலிருந்து உரிய நிவாரணத்தை வழங்கி வருகிறது. எமது பணிகளின் பிரதிபலனை மக்கள் விரைவில் […]

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது!

“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியே மக்களிடம் ஆணை கேட்டனர். இந்த ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் […]

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி!

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். இலங்கையில் நடைபெறும் பிரதான சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியான Build Sri Lanka வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சி, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் […]