லோஷன் – கிரீம்களில் அதிகளவு உலோக கலப்பு – நுகர்வோர் அதிகார சபை அவசர எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் படி, சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கனரக உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி, நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளின் பட்டியல் மற்றும் அவற்றின் […]

ஜனாதிபதிக்கு நன்றி!

காணி நிர்ணயசட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 28.03.2025 ஆம் திகதி வர்த்தமானியை இரத்துச் செய்தமைக்காக ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள் எனத் தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் […]

ஜப்பானில் வெடிவிபத்து – 10 பேர் காயம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், விபத்தில் காயமடைந்தவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதிப் பிரதமர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ் தலைமையிலான தூதுக்குழு செவ்வாய்கிழமை (27) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல் ஆப்பிள்டன், பிரதி பிரதமரின் பணியாளர் குழாம் பிரதானி கலாநிதி ஜான் ஜோஹன்சன், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக […]

அமைச்சின் வாகனத்தில் விடுமுறைக்கு சென்ற சாரதி – விசாரணைகள் தீவிரம்!

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான சொகுசு வேன் ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அமைச்சின் போக்குவரத்துப் பிரிவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை சந்தேகநபரான சாரதி அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று, சொகுசு வேனை எடுத்துக் கொண்டு, காரியாலய அலுவலுக்காக வெளியில் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிக்கு தவறான தகவல்களை வழங்கி சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் வேன் திரும்பக் கொண்டு வரப்பட்டதாகவும், அவர் சில […]

பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கையின் கண்டனம் மற்றும் அனுதாபத்திற்கு ஜெய்சங்கர் பாராட்டு!

ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக புதுடில்லிக்கு சென்ற இலங்கை நாடாளுமன்றக் குழுவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்ததற்கும், அனுதாபம் தெரிவித்ததற்கும் அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். “வலுவான மக்கள்-மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படும் நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி விவாதித்ததாகவும் அவர் […]

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு ஆலோசனை!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு […]

கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க இடமளியோம் – சாகர காரியவசம்!

“ கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக அமையும். எதிரணிகள் வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் எமக்கு பிரச்சினை இருக்காது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற […]

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வன்னிப் பிளாசா விடுதியில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் […]

கனடா வாழ் பெண்னால் பிறிந்தது யாழ்.குடும்பம்!

கனடா வாழ் 49 வயது குடும்பப் பெண் தனது கணவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கூறி 31 வயதான 2 பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டநடவடிக்கை எடுக்கவுள்ள குடும்பப் பெண் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட குடும்பப் பெண் , யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள தனது வீடு, காணி மற்றும் சொத்துக்களை பராமரிப்பதற்காக, தனது வீட்டில் கணவனின் துாரத்து உறவுமுறையான குடும்பம் ஒன்றை அமர்த்தியிருந்தார். கனடா பெண்ணின் […]