அமெரிக்க சுற்றுலாத்துறையை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

அமெரிக்காவுக்கு வீதி மார்க்கமாக சுற்றுலா செல்லும் கனேடியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து 35.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதேவேளை ஆகாய மார்க்கமாக அமெரிக்கா செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கையும் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதன் விளைவை அமெரிக்கா அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்க விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் எல்லையிலுள்ள கடைகளுக்கு கனேடிய டொலர்கள் வடிவில் வரும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே நேரத்தில், கனடாவின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கணிசமாக அதிகரித்துவருகிறது. […]
கோபா குழுவின் உறுப்பினர்கள் இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு கள விஜயம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்மலானையில் உள்ள புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டனர். கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அண்மையில் (22) இந்த விஜயம் இடம்பெற்றது. இதில் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன, குழுவின் உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, டி.கே.ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன மற்றும் வைத்தியர் ஜனக […]
பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவை கொண்டிருப்பது அவசியம்!

சட்டமியற்றும் செயல் முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை தொடர்பான தேவையான அறிவைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே சபாநாயகர் […]
விஜய்யுடன் 23 வருடம் கழித்து சேர்ந்து நடிக்கும் நடிகை

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதால், ஜனநாயகன் படமே அவரது கடைசி படம். ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல நடிகை ரேவதி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய்யின் அம்மாவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை ரேவதி, கடந்த 2002ஆம் […]
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல்

தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள 06 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளதுடன் மாலை 05 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி, வைகோ, அப்துல்லா , வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகிய 06 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. ஜூன் 02 ஆம் […]
கண்டியில் திமிங்கில வாந்தியுடன் மூவர் சிக்கினர்!

கண்டி மாவட்டம் வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவின்ன பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி கட்டுகஸ்தோட்டை, வெலிகந்த மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 43, 57 மற்றும் 63 வயதுடையவர்கள் ஆவர். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் […]
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா!

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. ஜப்பானை மிஞ்சி இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய உருமாற்ற இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்., சுப்பிரமணியம் நேற்று (25) இதை அறிவித்தார். இந்தியா தற்போது 4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், IMF தரவுகளின் அடிப்படையில், இந்தியா தற்போது ஜப்பானிய பொருளாதாரத்தை விட பெரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி […]
ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் […]
போலந்து வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிகோர்ஸ்கி, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான காஜா கலாஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவ்விஜயத்தின்போது, போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமரும், […]
ஹவார்டுக்கு மானியங்களை வழங்க மாட்டோம் – ட்ரம்ப்

ஹவார்ட் பல்கலைக்கு இனி அதிக மானியங்களை வழங்க மாட்டோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அங்கு 31 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை நிதியுதவியாக வழங்குகிறோம். நாங்கள் ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு அதிக மானியங்களை வழங்கி வருகிறோம். இனி அதிக மானியங்களை நாங்கள் வழங்க மாட்டோம். ஹவார்ட் வெளிநாட்டு மாணவர்களுக்கு […]