இன்று இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணை பிரதமர்!

நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று 24ஆம் திகதி இலங்கை வர உள்ளார். அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட உள்ளார். வின்ஸ்டன் பீட்டர்ஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார். வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகியவற்றில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே அவருடைய […]

இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்!

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடர் நிறைவடையும் வரையில் ரோட்னி கிப்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார். ரோட்னி கிப்ஸ் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகோஸ் தீவுகளின் உரிமை மொரீஷியசிடம் கையளிப்பு!

சாகோஸ் தீவுகளின் உரிமையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த பிரிட்டன், அதன் இறையாண்மையை மொரீஷியசுக்கு மாற்ற தீர்மானித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான மொரீஷியஸ், 1968 வரை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பின் முழு சுதந்திரம் பெற்றது. இருப்பினும் மொரீஷியஷின் சாகோஸ் தீவுக்கூட்டத்தை பிரித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம் என்ற பெயரில் பிரிட்டன் நிர்வகித்து வந்தது. சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில், அமெரிக்கா – இங்கிலாந்து விமான தளமும் உள்ளது. 99 […]

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலை பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் தமிழ்ச் சைவப்பேரவை வலியுறுத்தல்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் தமிழ்ச் சைவப்பேரவையினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல […]

வெல்லவாய பகுதியில் மற்றுமொரு வாகன விபத்தில் எழுவர் காயமடைந்து வைத்தியசாலையில்!

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இன்று (24) விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லொரியின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது […]

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது!

வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சீருடைகளுடன் நேற்று மாலை இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர். அவரது வீட்டை மேலும் சோதனை செய்தபோது, பாவனைக்கு உதவக்கூடிய ரவைகள் மற்றும் காவல்துறை […]

மாலினி பொன்சேகாவின் இறுதி நிகழ்வு திங்கட்கிழமை!

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன. இலங்கைத் சினிமாவின் ராணி என்ற அந்தஸ்த்து பெற்ற மறைந்த மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) […]

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார்!

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். “ரெய்சினா – Raisina” மாநாடு ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்றது. இலங்கை சார்பாக விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இவ் மாநாடானது, காலநிலை மாற்றம், பசுமை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் நீதி போன்ற முக்கியமான பிரச்சினைகளில் […]

கனடாவில் மீண்டுமொரு நினைவுத்தூபி – உடனடியாக தீர்மானம் நிறைவேற்றம்!

கனடாவில் (Canada) மற்றும் ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை (Sri Lanka) அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த […]

துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை நேற்று […]