வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்!

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் மற்றும் இலங்கையின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பல கட்ட இணையவழி கலந்துரையாடல்கள் மூலம் இந்த நேரடி சந்திப்பிற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்பட்டதுடன், இது பொருளாதார […]

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்!

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறிவருவது ஆச்சரியம் அளிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார். அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாளைய தினம் வெள்ளிக்கிழமை சீன நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வறுமை ஒழிப்பு பொருளாதார முன்னேற்றம் தொடர்பான […]

கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்? இதன்போது தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும், கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா?, கோவிலில் களவு போனால் முறைப்பாடு செய்வது யாரிடம், பொலிஸ் முறைப்பாட்டை தலைவர் வாபஸ் வாங்க முற்பட்டது ஏன்?, தடயங்கள் […]

கதிர்காமத்துக்கான புனித யாத்திரை – குமண காட்டு வழிப்பாதை ஜூனில் திறப்பு!

கதிர்காமத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பயணிக்கும் யாத்திரிகர்களுக்காகவே குறித்த காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவம் அடுத்த மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே, யாத்திரிகர்களுக்காக குமண தேசிய பூங்கா ஊடான காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அம்மா நான் திருடவில்லை” – மனமுடைந்த சிறுவன் மரணம்!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பகுல்தா உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வந்த கிருஷ்னெண்டு (13), அங்கிருந்த ஒரு இனிப்பகத்தில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அம்மா நான் திருடவில்லை கடையில் ஆள் இல்லாதபோது சிப்ஸ் பாக்கெட்டுகளை சிறுவன் திருடிச் சென்றதாக, கடையின் உரிமையாளர் சிறுவனைப் பிடித்து வந்து […]

யுவதியிடம் அத்துமீறிய வைத்தியர் – பெற்றோரையும் பொலிஸாரிடம் சிக்கவைத்தார்!

தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலி, கராப்பிட்டிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், உணவடுன பிரதேசத்தில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். யுவதியின் பெற்றோருக்கு பணம் அங்கு வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குவற்கான வாடகை அறைகளும் உள்ளன. இந்நிலையில், குறித்த மருத்துவர் தனது மருத்துவ நிலையத்தில் […]

யாழில் கடத்தப்பட்ட பெண் மீட்பு!

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தமது சொந்த விருப்பத்துக்கமையவே அவரது பெற்றோருடன் சென்றதாக காவல்துறையினரிடம் அறிவித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் கடந்த தினம் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பளை காவல்துறையினர் […]

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியர் ஐ.எம் கருணாதிலகவிற்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக வைத்தியக் கல்வித்துறையின் முன்னோடி என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய கல்வி தொடர்பிலான முதலாவது பேராசிரியர் என்ற கௌரவத்திற்கும் உரித்தானவர். அவர் 2000 ஜூன் மாதத்திலிருந்து கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். மேலும் […]

வெளிநாட்டுக் கடன்கள் நீக்குதல் சட்ட மூலத்தில் சபாநாயக் கையொப்பம்!

வெளிநாட்டுக் கடன்கள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். வெளிநாட்டுக் கடன்கள் நீக்குதல் சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையில் குறித்த சட்டமூலம் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீட்டையடுத்து இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.05.08ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைய இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு 06 இலக்க வெளிநாட்டுக் […]

ஹவார்ட் பல்கலை விவகாரம் – ட்ரம்ப் அரசின் மீது சீனா கடும் விமர்சனம்!

ஹவார்ட் பல்கலைக்கழக விவகாரத்தில் ட்ரம்பின் அரசாங்கத்தின்மீது சீன அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் சர்வதேச அங்கீகாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என சீன அரசு விமர்சித்துள்ளது. ஹவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது பல்கலைக்கழகத்தில் இணைந்து அவர்களது கல்வியைத் தொடரலாம் என்று ஹொங்ஹொங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துக்கொடுப்பதுடன் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படும் எனவும் அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.