கனடா – இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் 10 வீடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டன. கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டம் நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கனடாவில் இயங்கிய வண்ணம் தாயகத்தில் நற்பணிகள் […]
யாழ்ப்பாணத்தில் உணவருந்திய பின்னர் இருந்த யுவதி திடீரென மரணம்!

யாழ்ப்பாணத்தில் உணவருந்திய பின்னர் இருந்த யுவதி திடீரென மரணமான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் திகதி புதன்கிழமை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி நேற்றையதினம் இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார […]
யாழில் ஆலய உண்டியலிடல் மோதிய முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் 22ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார். இதன்போது கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு […]
ஐக்கியராச்சியத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கில் விளக்குமாறு உற்பத்தி நிலையம்!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கியராச்சியத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கு We Can மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் விளக்குமாறு உற்பத்தி நிலையம் புதன்கிழமை (21) மாலை வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் தொழில்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.டி.அரவிந்தராஜ்,வடமாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் ,அடம்பன் பங்குத்தந்தை சீமான் அடிகளார்,மன்னார் நலன்புரி அமைப்பு ஐக்கியராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் […]
ஆனையிறவு உப்பள ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 22ம் திகதி வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அன்றைய தினம் மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை […]
யாழில் நாளை ஆரம்பமாகவுள்ள சிலப்பதிகார விழா!

அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும் பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகளான தமிழ் அமுதம், வழக்காடு மன்றம், கவியரங்கு, கதாப்பிரசங்கம், இலக்கிய ஆணைக்குழு, விவாத அரங்கு, பட்டிமன்றம் போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 22ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றதற்கமைய, இச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக […]
தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த விழிப்புணர்வு!

தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த விழிப்புணர்வு இன்று வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த மற்றும் வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது இந் நிகழ்வானது கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் அரச, தனியார் […]
வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வரும் மன்னார் தீவு வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுமன்னார் தீவு வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு மன்னார் தீவு!

மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.மன்னார் தீவு வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு வருகிறது.அதற்கு அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களும் முன் நின்று செயல்பட்டு வருகிறது.இதற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ்அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் (21) புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் […]
ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் பிரதமர் இடையில் சந்திப்பு!

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார். சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நல்லிணக்கம் போன்ற முக்கிய துறைகளில் இலங்கையின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஐ.நா.வின் தொடர்ச்சியான ஆதரவை ஃபிரான்ச் மீண்டும் வலியுறுத்தினார். 2025 ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் […]