சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62ஆவது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிற்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் […]

கனடா போஸ்ட் மற்றுமொரு போராட்டத்திற்கு முஸ்தீபு!

ஆண்டுக்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கடிதங்களையும் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பொதிகளையும் கையாளும் 55,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட Canadian Union of Postal Workers தொழிற்சங்கம் திங்கட்கிழமையன்று வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது வேலை நிறுத்தமாக இது அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நிர்வாகத்திற்கு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக Crown corporation தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் முடியும் வரை புதிய […]

இஸ்ரேலுக்கு எதிராக பிரான்ஸ்,ஐக்கிய ராச்சியம், கனடா இணைந்து  கூட்டறிக்கை!

இஸ்ரேல் தனது மிக மோசமான புதிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா திங்களன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. காசாவிற்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் மட்டுப்படுத்தியுள்ளமையானது நியாயமற்றதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 மாத போரின் தொடர்ச்சியாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழியாக […]

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய திக்வேஷ் ரதி, அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்!

  ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ல்க்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (19) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி […]

பதுளை நகரில் மக்கள் மத்தியில் தம்பியை வெட்டிய அண்ணன் !

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதலில் முடிவடைந்தது. பதுளை நகர மையத்தில் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், அண்ணன் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதோடு சரிமாரியாக வாள் வீச்சு ஊடாக காயப்படுத்திக் கொண்டிருந்தார். குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தம்பியார் […]

வடக்கு மக்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் தாமதம் ஏற்படும்!

வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரியவர்களுக்கு காணி உரித்துக்களை வழங்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, அங்குள்ள காணிகளை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. வர்த்தமானியை நிறுத்தினால் வடக்கு மக்களுக்கு காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதிலேயே தாமதம் ஏற்படும் என விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். காணி தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று தொடர்பாக கடந்த மே 8ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற […]

‘பெருமைக்காக ஆடி எந்தப் பலனும் இல்லை’ – தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார். ‘பெருமைக்காக ஆடி பலனில்லை!’ டாஸில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியதாவது, ‘நாங்கள் ஏற்கெனவே அடுத்த சீசனுக்கான வேலையைத் தொடங்கிவிட்டோம். பேட்டிங் ஆர்டரில் யார் யாரை எந்த ரோலில் அடுத்த சீசனில் இறக்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். பவர்ப்ளேயில் வீச எங்களுக்கு இன்னும் ஒரு பௌலர் […]

மே – 23 ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் இயங்காது!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாகக் குறித்த சேவைகள் இவ்வாறு மே 23 வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தி பிரதி பிரதமர் இலங்கை விஜயம்!

நியூசிலாந்தின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​துணைப் பிரதமர் பீட்டர்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்துடன் உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, […]

’ஹரக் கட்டா’வுக்கு ஊடக தடை!

ஊடகங்களுக்கு முன்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பின் கீழ் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டார், அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தபோது அதிகாரிகள் ஊடகங்களிலிருந்து அவரைப் பாதுகாத்தனர். கடந்த வாரம், ஹரக் கட்டா, 300 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்க மறுத்ததன் விளைவாக தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் […]