இலங்கை தமிழர்களைப் புறக்கணிக்க இந்தியாவில் இருநாணய நெறிமுறை

உலகம் முழுவதும் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து அழிவுகளைத் தாண்டி வந்த அகதிகளுக்கு தஞ்சமாக அமைந்த நாடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உருவகத்தின் பின்வட்டத்தில் தீவிரமான பாகுபாடு மற்றும் அரசியல் நோக்கங்களால் அழுத்தப்பட்ட உண்மைகள் புலப்படுகின்றன. தீபத்தையரும் பங்களாதேஷ் அகதிகளும் குடியுரிமையுடன் வாழ்ந்து வருகின்றனர்; ஆனால் இலங்கை தமிழர்கள் மட்டும் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அகதி முகாம்களில் அடக்கிப் பிடிக்கப்பட்டு, எந்தவிதமான குடியுரிமையும் இழைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். […]
இலங்கையின் இனப்படுகொலை குற்றங்களை ஒருபோதும் மறக்க கூடாது!

இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre,) ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என (Pierre Poilievre ) தெரிவித்துள்ளார் . முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் (Pierre Poilievre ) மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான […]
வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு தற்போதைய அரசாங்கமும் நியாயம் வழங்கவில்லை – கோவிந்தன் கருணாகரன்

தங்களது தரப்பினருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலையில் இல்லை என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் […]
23,000 பாகிஸ்தானியர்கள் வெளிநாட்டு சிறைகளில்!

வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23,000 பாகிஸ்தானியர்களில், 12,156 பேர் சவுதி அரேபியாவில் உள்ளதாக, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் […]
இந்த வருடத்தில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகவிலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தூண்டுதலால் நடந்தவை. இந்த சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு […]
16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 12,434 படையினருக்கு பதவி உயர்வு

16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அங்கீகாரத்துடன், முப்படைகளின் 217 அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகள் 12,217 க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10 093 இதர பதவிகள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 இதர பதவிகள், இலங்கை விமானப்படையின் 09 அதிகாரிகள் மற்றும் 868 ஏனைய பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்க்ஷர்கள் தண்டனை கிடைக்கும் வரையில் காத்திருக்கின்றோம் – பிரம்டன் மேயர்!

இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக் கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம். தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் […]
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது!

“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் […]
வாழைச்சேனையில் விபத்து; ஸ்தலத்தில் உயிரிழந்த நபர்!

வாழைச்சேனையில் டிப்பர் – உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (19) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த டிப்பர் வண்டியும், உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில், உழவு இயந்திர சாரதி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோஹ்லி அணியிலிருந்து விலகிய முக்கிய பந்து வீச்சாளர்!

18ஆவது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 60 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஓப் சுற்றிலிருந்து பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நிகிடி விலகியுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கு தயாராகும் பொருட்டு அவர் தாயகம் திரும்பவுள்ளார். அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளரான […]