“முள்ளிவாய்க்கால் புண்ணிய பூமி“ – சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு!

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பேஸ்புக் காணொளி ஊடாக பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமிபோன்று தெரிகிறது. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர். […]
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் 17ம் திகதி அன்றையதினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சுடரேற்றி, சரோஜினி யோகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வெற்றிவேலு. யோகேஸ்வரனின் மனைவியான சரோஜினி யாழ்,மாநகர முதல்வராக இருந்த […]
குழந்தையை பிரசவிக்கு இருந்த நாளில் தயார் கொலை!

கர்பிணித் தாயொருவருக்கு குழந்தை பிறக்குமென வைத்தியர்கள் அறிவித்திருக்கும் நிலையில் குறித்த தாய் தனது கணவரால் தூக்கிட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் தெனியாய விகரயென EW பிரிவு என்சல் வத்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட நிஷாந்தினி வயது 25என்ற கர்பினித் தாய் ஒருவரே தனது கணவனால் கொலை செய்ய பட்டு தூக்கில் இடப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பு இன்று அந்த குழந்தை பிறப்பதுகான திகதி வைத்தியர்களால் கொடுக்க பட்டு உள்ளது. இருந்தும் […]
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு இடமாற்றம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம் பெற்று செல்வதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக திரு.சிவரஞ்சன் சிறப்பாக கடமையாற்றி இந்த பதவி உயர்வை பெற்று செல்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குறித்த பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஊசி மூலம் போதை ஏற்றிய தென்மராட்சி இளைஞர் ஆபத்தான நிலையில்!

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது. இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிகப் பிரமாண்டமாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் கொடியேற்றம்!

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபம் மிகப் பிரமாண்டமாக 17ம் திகதி அன்று சனிக்கிழமை மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானாது 155 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இம்முறை கொடியேற்றமானது மிகவும் பிரமாண்டமான ரீதியில் சிறப்பாக இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. கொடியேற்றமானது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் […]
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி அ ன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்றது. -தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. […]
மன்னார் அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் 17ம் திகதி சனிக்கிழமை ) இரவு அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் ஆடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது மீனவர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து கிராம சேவையாளர் முருங்கன் […]
கண்ணீர் மழையில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது 18ம் திகதி அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தூபியில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின் போது ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள, ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.