இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை – பாக். பிரதமர்!

பாகிஸ்தான் இராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் ராணுவம் இந்தியாவுக்கு திறம்பட தக்க பதிலடி கொடுத்துள்ளதன் மூலம், பாகிஸ்தானின் இராணுவ வரலாற்றில் ஒரு பொன்னான சகாப்தத்தை எழுதியுள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன் பேசிய அவர், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தியா – பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை மே 10ஆம் திகதி இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை […]

ஆவா குழு தலைவனை நாடு கடத்துமாறு கனடா நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான பிரபல ரௌடி நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்றவழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர் இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார். அங்கு சென்றும் திருந்தி வாழாமல், அங்கும் வாள்வெட்டு குழுவை உருவாக்கி, மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களை வெட்டிய குற்றத்திலேயே நாடு கடத்தப்படவுள்ளார். பிரான்ஸில் வாள்வெட்டு குற்றத்தில் பொலிசாரால் தேடப்பட்டதும், ரௌடி பிரசன்னா கனடாவுக்கு தப்பிச் சென்றார். […]

ஜனாதிபதி அலுவலக வாகன விற்பனைக்கு எதிராக முறைப்பாடு!

ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் ஏலமிடப்பட்ட போது போலியான விலை மனு கோரல் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். அந்த வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளமை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

மின்னல் தாக்கி 09 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கம் காரணமாக ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூவரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் இருவரும், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கோராபுட் மாவட்டத்தில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பலத்த மழை மற்றும் […]

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை!

நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது வினைதிறன் அற்ற அரச நிர்வாகமே காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் […]

கட்சி பேதங்களை விடுத்து பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்கத் தயார்!

பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டில் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று […]

அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று (மே 16) துருக்கியில் நடைபெற்றது. முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை, 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் ஓர் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 17) அதிகாலை உக்ரைனின் […]

காணி சுவீகரிப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் – சுமந்திரன் அறிவிப்பு!

 வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும் எனவும் தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம்  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் கரையோரப் […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நல்லூரடியில் இரத்ததான முகாம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

குழிக்குள் விழுந்த மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

கெக்கிராவ – நேகம, அலிவங்குவ பகுதியில், நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 3½ வயதுக் குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை, தனது வீட்டிற்கு 200 மீற்றர் தொலைவில் உள்ள தனியார் காணியொன்றில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது கழிவுகளை அகற்றுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நீர் நிரம்பிய குழிக்குள் மூழ்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சரீரம் நேகம்பஹ வைத்தியசாலையில் […]