நல்லூருக்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரி ஆணையாளருக்கு கடிதம்!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரி யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மககள் முன்னணியின் 4ம் வட்டார உறுப்பினர் சந்திரசேகரம் இராஜகுமார் மற்றும் கட்சி உறுப்பினர்களால் ஆட்சேபனைக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம், சைவ மக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடத்தப்படுவது குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள். சைவ மக்களின் ஆன்மீக உளவியலுக்கு […]

சக மாணவியின் ஆபாசப் படத்தை பகிர்ந்த பல்கலை மாணவனுக்கு சிறை – மாணவிக்கு 50 ஆயிரம் இழப்பீடு!

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவருக்கு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக அபராதம் மற்றும் இழப்பீடு […]

மனைவியை பிரிய இதுதான் காரணம் – நடிகர் ரவி மோகன்!

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி தன்னை கணவராக கூட மதிக்கவில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். தனது மனைவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்திருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் இணைந்து திருமண நிகழ்வில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து ரவி மோகனின் […]

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றயதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, […]

இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவரின் தெரிவு நாளை

இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவரை நாளை (16) பி.சி.சி.ஐ இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பி.சி.சி.ஐ நாளை ஆலோசனை நடந்தவுள்ளது. ஆலோசனைக்கு பிறகு புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவரை நாளை (16) பி.சி.சி.ஐ இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பி.சி.சி.ஐ நாளை ஆலோசனை […]

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30,78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.18,46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தின் இந்திய முதலீட்டுக்கு ட்ரம்ப் எதிர்ப்பு!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவுகின்றதனால் , சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஐபோன்களை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கூறியிருந்தார். இந்நிலையில், அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசியதாவது: அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருடன் எனக்கு சிறிய பிரச்னை உள்ளது. உங்களை நான் நன்றாக கவனித்துக் […]

காதலுக்காக மோதல் – கழுத்தறுக்க முயன்ற மாணவர்கள்!

திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது ஏற்பட்டுள்ளது. காதல் பிரச்சனை காரணமாகவே இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் […]

இலங்கை கடற்படைக்கு அதிநவீன அணுசக்தி கண்டறிதல் கருவி அன்பளிப்பு!

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இது அதிகரிக்கிறது. அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட […]