போராடி வென்றது சென்னை!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன் படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்று […]
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் – பாக்.பிரதமர் மிரட்டல்!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி ஆயுததாரிகளால் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்நிலையில், எல்லை கடந்த ஆயுததாரிகளுக்கு ஆதரவு அளித்தமைக்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ஈரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் […]
சிறுவனை தூக்கியடுப்பதாக அச்சுறுத்தும் வன்னி பொலிஸார்!

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தானும் ஒரு கடத்தலுக்கு ஆளானதாகவும், அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகையில் பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்வது பெரும் அச்சுறுத்தல் என, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகரைச் சேர்ந்த […]
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வந்த உலக வங்கி தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

லங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள உலக வங்கி குழுமம் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலாக் கைத்தொழில், […]
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு!

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரது டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதால் அதன்பின் அணித்தலைவர் பதவி குறித்து பேசப்படாமல் இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் […]
இந்திய- பாகிஸ்தான் மோதலுக்கு ஆப்கான் கவலை!

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் ‘ஒபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் […]
இறைபதம் அடைந்த நல்லை அதீன முதல்வருக்கு கனடாவில் அஞ்சலி!

“ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்குமான ஒரு அடையாளமாகவும் அதிகாரமாகவும் விளங்குகின்ற நல்லை ஆதினத்தை இதய சுத்தியுடன் பரிபாலனம் செய்தவர் இறைபதம் அடைந்த சுவாமிகள் அவர்கள். அன்னாரது பணிக்காலத்தில் நல்லை ஆதினத்தை மக்கள் ஒரு மத பீடமாக மாத்திரம் பார்க்காமல் அதனை ஒரு சமூக பணியாற்றும் ஒரு உயர் பீடமாகவும் கணித்து வந்தார்கள்” இவ்வாறு. மறைந்த நல்லை ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்காக கனடா ஸ்காபுறோ நகரில் […]
வட இலங்கை மக்கள் தவிர்க்க வேண்டியவர்களை தவிர்த்துள்ளனர்!

பாராளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடஇலங்கை மக்கள் தவிர்க்கவேண்டியவர்களைத் தவிர்த்து தேர்வு செய்யவேண்டியவர்களைத் திறம்படத்தேர்வு செய்துள்ளார்கள் என முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் தனது முதநூல்ப் பக்கத்தில் கருத்துப் பதிவுசெய்துள்ளார். மேற்படி பதிவில் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார். “பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கும் உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகளுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைக்காண்பீர்! பாராளுமன்றத்தேர்தலில் வடக்கில் தமிழ்த்தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் மீதுகொண்ட அதிருப்தி காரணமாக திசைகாட்டியை யும் ஊசியையும் வெல்லவைத்தார்கள். […]
பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்!

நாளை டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டி மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் என தகவல் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாணியில் இந்தியாவும் நடக்க வேண்டும்!

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]