ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து டொரண்டோ மேயர் அதிருப்தி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது 100 சதவீத வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, “இது டொரண்டோவை மோசமாக பாதிக்கும்,” என நகர மேயர் ஒலிவியா சோ தெரிவித்துள்ளார். “அமெரிக்க திரைப்பட தொழில் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது,” எனவும், “மற்ற நாடுகள் திட்டமிட்டு படைப்பாளிகளை அமெரிக்காவிலிருந்து வேறு இடங்களுக்கு ஈர்த்துவருகின்றன, இது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு எனவும் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார். அந்த வரி எப்போது, எவ்வாறு நடைமுறைக்கு வரும் […]
ஸ்கைப் சேவைக்கு முற்றுப்புள்ளி!

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வீடியோ அழைப்பு சேவையான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் பயன்பாடு இன்று (05) முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஸ்கைப் தனது எக்ஸ் கணக்கில் மே மாதத்திலிருந்து செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறி ஒரு குறிப்பை வெளியிட்டது. பணிநிறுத்தத்திற்குப் பிறகு, ஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மைக்ரோசொப்ட் டீம்ஸ் ப்ரீயுடன் இணைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதன்முதலில் […]
Canada Post மற்றுமொரு வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு!

கனடா போஸ்டுக்கும் அதன் 55,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்தையில் எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்த காலக்கெடு நெருங்கி வருவதை கருத்திற்கொண்டு கடந்த வாரம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா போஸ்டுக்கும் தொழிற்சங்கமான CUPW இற்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் எதிர்வரும் May 22 ஆந் திகதி முடிவடையவுள்ள நிலையில் குறித்த திகதிக்குள் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். […]
14 வயது சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது!

அஜாக்ஸ் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கௌரிகிருஷ்ணகுமார், கதிர்காமநாதன் என்ற தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 02 ஆந் திகதி கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கையொன்றில், அஜாக்ஸ் பகுதியில் இளவயதுடைய ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஹெமில்டன் பொலிஸாரிடமிருந்து […]
சிறையில் கைதி உயிரிழப்பு – சிறப்பு விசாரணை ஆரம்பம்!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திசாநாயக்க. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் நிலை 1 சிறைக் காவலரின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், மேலதிக விசாரணைக்காக வீரவில சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்ட பின்னர் இந்தக் கைதி […]
கொழும்பில் கடத்தப்பட்ட சிறுமி – சந்தேக நபரை தேட உதவி கோரும் பொலிஸார்!

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத ஒரு நபர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது உள்ளே நுழைந்து, சிறுமி அமர்ந்திருந்த பின் இருக்கையில் ஏறிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு கூறியுள்ளார். அந்தப் பெண் […]
ஐ.நாவின் 20 ஆவது வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி நாளை (06) காலை 7.40 மணியளவில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் பிரதான உரையை நிகழ்த்த […]
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 04 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. இதன்போது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி […]
இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மே 7-ஆம் திகதி மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய மத்திய உட்துறை அமைச்சரகம் தரப்பிலிருந்து இன்று ( 5) அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே 7-ஆம் திகதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குரியவாறு […]
மோடியை கூண்டுக்குள் அடைத்த காலிஸ்தான்கள்!

கனடாவில் காலிஸ்தான் குழுவினர் , பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களை கூண்டில் வைத்து பேரணியாகச் சென்றுள்ளனர். கனடாவில் உள்ள ஹிந்துக்களை நாடுகடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதால் அந்நாட்டில் வாழும் ஹிந்துக்கள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. டொராண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா என்ற பகுதியில் ஹிந்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக காலிஸ்தான் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (4) பேரணி நடத்தியுள்ளனர். பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கண்டனங்கள் இதுதொடர்பான விடியோவை பகிர்ந்த கனடா ஹிந்து வர்த்தக […]