பான்கிரோப்ட் ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் உயிரிழப்பு!

இவ்வார தொடக்கத்தில் பென்கிரோப்ட் பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பீடர்புரூகின் வட.கிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெராடே ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஒன்றோரியோ மாகாணத்தின் பென்கிரோப்ட் பகுதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவத்தின் போது படகுக்குள் இருந்த ஒருவர் காணாமல் போயிருந்தார். மேலும் இரண்டு ஆண்கள் பாதுகாப்பாக கரைக்கு வந்துவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். அவசர […]
500 மதுபான போத்தல்களுடன் தமிழர் ஒருவர் சிக்கினார்!

டொரண்ரோ நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் $30,000 பெறுமதியான கிட்டத்தட்ட 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 66 வயதுடைய தமிழரான விக்கேஸ்வரராஜா மயில்வாகனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரண்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற தெரு மற்றும் வெலெஷ்லி தெரு கிழக்குப் பகுதியில் கடத்தலுக்காக திருடப்பட்ட சொத்தை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே குறித்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டன. இந்த சந்தேக நபர் மதுபானம் கொள்வனவு செய்யும் […]
மார்க் கார்னி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு அடுத்த வாரம்!

அடுத்தவாரம் கனேடிய பிரதமர் மார்க் கார்னியை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. செவ்வாயன்று தொலைபேசியில் இருவரும் உரையாடிய போது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம் என கார்னி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் கார்னி இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி விலாடிமர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் […]
இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னார் விஜயம்

இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காசிநாத் செந்தில் 30ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை மாலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக செயல்பட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்கள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில் அன்றைய தினம் மாலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு விஜயம் மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது […]
நாகை – காங்கேசன்துறை கப்பலில் 22 கிலோவை இலவசமாக கொண்டுச் செல்லலாம்!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை கப்பல் நிறுவனத்தில் அதன் தலைவர் சுந்தர்ராஜன் மே 1ம் திகதின்று நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் […]
யாழில் வீதியால் சென்ற நபர் திடீர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

மே 1ம் திகதி அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வறுமை காரணமாக 1ம் திகதி அன்று காலை உணவு அருந்தாமல் வெளியே சென்றுள்ளார். பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் […]
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கைதாகலாம்!

இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும்.திருட்டு அரசியல் இல்லாமல் போகும்.தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர்.நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது.இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் பகுதியில் ஏப்ரல் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வேட்பாளர் எம்.எச்.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் […]
அவல நிலை மன்னார் பொது போக்குவரத்துச் சாலை -இ.போ.ச தலைவர் திடீர் விஜயம்

மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் 30ம் திகதி புதன்கிழமையன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப் பின்றிய நிலையில் காணப்பட்ட நிலையில் […]
தகாத உறவால் பெண் ஒருவர் கொலை

மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவர் ஆவார். பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரைவிட்டு பிரிந்து மற்றுமொரு நபருடன் ஒன்றாக வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. மேலும் சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் […]
ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் – எம்.ஏ.சுமந்திரன்!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் […]