ஹரி ஆனந்த சங்கரிக்கு மீண்டும் வெற்றி!

கனடியர்களால் மாத்திரமல்ல உலகெங்கும் வாழும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட கனடியத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று லிபரல் கட்சியின் அரசாங்கமானது இன்னும் சில நாட்களில் பதவியேற்கவுள்ளது. கடந்த 28ம் திகதி நடைபெற்ற மேற்படி கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் தனது Scarborough Guildwood-Rouge Parkதொகுதியிலிருந்து அதிக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நிச்சயமாக புதிதாக பதவியேற்கவுள்ள Mark Carney’யின் அமைச்சரவையில் ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக நியமிக்கப்படுவார் என நம்பப்படுகிறது. இந்த தேர்தலில் டொரண்ரோ பெரும்பாகத்தில் வெற்றி […]
சட்ட வல்லுனராவதே எனது கனவு – வணிக துறையில் யாழ்ப்பாணத்தில் முதலிடம் வாரணன் தெரிவிப்பு!

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை கற்றார். கணக்கீடு, பொருளியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளார். அவர் கருத்து தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரம் கற்கும் போது நான் பல சவால்களை எதிர்நோக்கினேன். அந்த சவால்கள் அனைத்தையும் எனவு பெற்றோரே நிவர்த்தி செய்தனர். இதானால் பெற்றோருக்கு முதற்கண் நன்றியை […]
காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்!

காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சகோதர-சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. […]
வடக்கின் கரையோர பகுதி இளையோரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க வேண்டும்!

வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,போதைப்பொருள் பாவனையில் இருந்து இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘போதைப்பொருள் வேண்டாம் நமது இளையோரை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்கள் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு 29ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் இடம் பெற்றது. .இதன் போது […]
பதவி விலகினார் கிறீன் கட்சியின் இணைத் தலைவர் ஜோனாதன் பெட்னௌல்ட்!

கிறீன் கட்சியின் இணைத் தலைவரான ஜோனாதன் பெட்னௌல்ட், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் எனது இராஜினாமாவை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மோதல் பகுதிகளில் 14 ஆண்டுகள் பணியாற்றிய மனித உரிமைகள் புலனாய்வாளர், ஆர்வலர் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளரான பெட்னௌல்ட், பெப்ரவரியில் எலிசபெத் மேயுடன் கிறீன் கட்சியின் இணைத் தலைவராக இணைந்தார். தனக்குச் சொந்தமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் கிடைக்காத்தால், பெட்னௌல்ட் மாண்ட்ரீல் தீவில் உள்ள அவுட்ரெமாண்டில் இம்முறை […]
இன்று நல்லிரவு முதல் பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். […]
அடுத்த பாப்பரசராக விரும்பும் ட்ரம்ப்!

நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன் அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார். போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார் உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு […]
ஆயிரம் ஏக்கர் வன வளர்ப்பு செய்யத் தீர்மானம்!

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தனியார் துறையுடன் இணைந்து ஆயிரம் ஏக்கரில் வள வளர்ப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அரச – தனியார் – மக்கள் கூட்டிணைவுடன் (Public- Private – People Partnership) 4P எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்த முன்மொழியப்பட்ட பாரிய அளவிலான திட்டமாக இந்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. திட்டம் தொடர்பான குறித்த தொழில்நுட்ப விடயங்களைத் தீர்க்கவும், காணியை […]
அமெரிக்க வரி விதிப்பு – 90 நாட்களில் இணக்கத்துக்கு வர முயற்சி!

தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இன்று (30) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள சுமார் நூறு நாடுகளை குறிவைத்து, வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 […]
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது!

மே மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.