இலங்கை பொருளாதார மையங்களாக மாறப்போகும் ஜனாதிபதி மாளிகைகள்!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த பங்களாக்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி, ஜனாதிபதி மாளிகைகளை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட வேண்டுகோள்கள் […]

35 வருடங்களுக்கு பின்னர் காங்கேசன்துறை – பலாலி பேருந்து சேவை!

35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய, இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்கவின் பிரசன்னத்துடன் இன்று அரச பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரச பேருந்து சேவையானது இரு வழித்தடங்கள் ஊடக முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மானிப்பாய் – ஆலங்குளாய் – அளவெட்டி ஊடாக தெல்லிப்பழை நோக்கி முன்னெடுக்கப்படும் […]

வியட்நாம் பறக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 3ஆம் திகதி முதல் மே 6ஆம் திகதி வரை,  வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ள உள்ளார். சர்வதேச வெசாக் தினத்தை மையமாகக் கொண்டு ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.

டெல்லியை வீழ்த்திய து கொல்கத்தா!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பத்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்று டெல்லி அணிக்கு 205 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய […]

மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!

கனடா பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் […]

கனடா பொதுத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றி! மூவருக்குத் தோல்வி!

கனடா பொதுத்தேர்தல்தலில் Liberal கட்சி 49.0 சதவீத வாக்குகளைப் பெற்று 168 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் Conservative கட்சி 42.0 சதவீத வாக்குகளைப் பெற்று 144 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் Bloc Québécois (BQ) கட்சி 6.7 சதவீத வாக்குகளுடன் 23 ஆசனங்களையும், NDP கட்சி 2.0 சதவீத வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் Green Party 0.3 சதவீத வாக்குகளுக்காக ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இதேவேளை இப் பொதுத்தேர்தலில் இம்முறை ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களில் […]

இருபது வருட எம்.பி பதவியை இழந்தார் பியர் பொலிவர்!

கனடாவில் நேற்று நடந்த 45ஆவது பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பியர் பொலிவர் தனது தொகுதியில் தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ஒட்டாவா பகுதியில் உள்ள கார்லெட்டன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலிவர் தனது 20 ஆண்டுகால எம்.பி. பதவியை இழந்துள்ளார். குறித்த தொகுதியில் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் 3,793 மேலதிக வாக்குகளினால் பியர் பொலிவரை தோற்கடித்துள்ளார். இந்த நிலையில், கனடா தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி […]

N.D.P கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் பதவி விலகுவதாக அறிவிப்பு!

கனடா தேசிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங், தேர்தலில் தோல்வியடைந்து பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். இதனையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் NDP கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறைந்த பட்சம் 12 ஆசனங்களைப் பெறத் தவறியதால் கட்சியின் அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும் இழந்தது. இதனால் ஜக்மீத் சிங், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.