லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று(25) காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த 22ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா். நேற்று முன்தினம் (23) தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது தீவிரவாதிகள் […]

பாகிஸ்தான்-இந்தியா மோதல் – இலங்கை ஜிஹாத் இலக்காக மாறும்!

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கையெழுத்திட்ட “ஏமாற்றும் ஒப்பந்தம்” காரணமாக இலங்கை தானாகவே மோதலில் தலையிடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் மகரகம நகரசபைக்கு பென்சில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு தமது ஆட்சி காலத்தில் இந்தப் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் ஆட்சி […]

விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை!

விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர். […]

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர், யாழ். பாசையூருக்கு இன்று (25.04.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். பாசையூர் மீன் சந்தைக்கு சென்று அதனை பார்வையிட்டதன் பின்னர், இறங்குதுறைக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், பாசையூர் கடற்றொழில் சங்கத்துடனும் கலந்துரையாடினார். கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்களால் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு […]

பாகிஸ்தானுடன் இனி விளையாட மாட்டோம் – பிசிசிஐ உறுதி!

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழந்த சம்பவத்தால், கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகவும் , இந்த கொடூரமான […]

பிள்ளையானால் பல குற்றச் செயல்கள்! – ரில்வின் சில்வா சாடல்

“கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணாமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான் இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த காலத்தில் கொலைகளை செய்திருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் பல்வேறு ஒப்பந்தங்களுக்காக பிள்ளையான் பல்வேறு கொலைகளை செய்துள்ளார்கள். குற்றங்களையும் செய்துள்ளார். எனவே, பிள்ளையான் பல்வேறு குற்றச்செயல்களில் முக்கியமானவராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பண்டாரவளையில் நேற்று (24) […]

ரணில் திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்

பரஸ்பர வரிவிதிப்புக்கு பின் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இந்திய ஏற்றுமதிகள் மீதான 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் திகதியுடன் மீண்டும் வரி அமுலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஸ்காட் […]

அரிசி ஆலையில் வெளியேறிய திடீர் புகையை சுவாசித்த ஐவர் பலி!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள அரிசி ஆலையில், அரிசி உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை அரிசி ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் சிலர், அரிசி உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதை ஆய்வு செய்ய சென்றனர். புகை மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். […]

பொலிஸ் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!

பொதுமக்களுக்கு பொலிஸாரால் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார். இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேவை கட்டணங்களை வசூலிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள 2023.06.02 திகதியிடப்பட்ட பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை எண் 2749/2023 (நிதி சுற்றறிக்கை 04/2023) இரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் மேலும் […]