காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய சுற்றுலாத்தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் சேர்த்தது. இதனையடுத்து வந்த பூரன் 9 ஓட்டங்களிலும் சமத் 2 ஓட்டங்களிலும் […]

டானின் கொலை – நாட்டின் பொது பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது!

டான் பிரியசாத் கொலை குறித்து சாணக்கியன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது, “ டான் பிரியசாத்தின் படுகொலை இலங்கையில் தற்போதைய பொது பாதுகாப்பு நிலை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. நான் அவரது செயல்களை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளேன் – பல ஆண்டுகளுக்கு முன்பு பொரளையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின் போது அவரால் உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்களுக்கு ஆளானேன் – அவரது அரசியல் சார்பு […]

தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை

தமிழ் தலைவர்கள் கேள்வி எழுப்புவதற்கு அருகதையற்றவர்கள் என்று கூறும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தமிழ் மக்களுக்காக எந்த தீர்வுகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட சகலவற்றிலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகவே உள்ளதாகவும் நாடாளுமன்ற […]

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட டான் பிரியசாத் உயிரிழப்பு!

தனது வீட்டில் இருந்தபோது இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் , தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த காலங்களில் பல்வேறு இன முரண்பாட்டு செயற்பாடுகளின்பின்னணியில் இருந்தவர் என்பதும், சிங்களத்துவத்தை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்!

மாத்தறை சிறைச்சாலையில் மூன்று கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடு்த்து சிறைச்சாலைக் காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க பென்சில் அல்லது பேனாவை பயன்படுத்தலாம்!

வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக வாக்காளர்கள் பேனா அல்லது பென்சிலை பயன்படுத்தலாம் என்று கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் சிலவற்றில் வாக்காளர்கள் அடையாளமிடுவதற்காக பென்சிலையே பயன்படுத்த வேண்டும் என தவறான பதிவுகள் வெளியிடப்படுகின்றன. அதேபோன்று சமூக ஊடகமான X தளத்தில் சில பதிவுகள் வாக்குச் சீட்டில் முறைகேடு ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு பேனாவைக் கொண்டு வருமாறு ஊக்குவித்துள்ளன. அத்துடன் பென்சிலால் அடையாளமிடப்படும் போது அது சேதப்படவோ அல்லது அழிவடையவோ வாய்ப்புள்ளதாகவும் அதனால் […]

பாப்பரசரின் மறைவிற்கு கனேடியத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்

சுவாசத்தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் ஈஸ்டர் தினமாகிய கடந்த திங்கட் கிழமை பாப்பரசர் பிரான்சிஸ்  உயிரிழந்தமை தொடர்பில் கனேடியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கனேடியத் தலைவர்கள் சிலரின் இரங்கல் செய்திகள் இங்கே பதிவு செய்யப்படுகின்றன. பிரதமர் மார்க் கார்னி – நீதியின் தெளிவு, ஆன்மீக தைரியம் மற்றும் எல்லையற்ற இரக்கத்தின் குரலாகவும் இருந்தார். அவர் பல விடயங்களில் உலகின் மனசாட்சியாக இருந்தார் பாதிக்கப்படக்கூடியவர்களின் சார்பாக சக்திவாய்ந்தவர்களை எதிர்கொள்ளவும் ஒருபோதும் […]

அர்ச்சுனாவுக்கு அழைப்பாணை

வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனை செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார். சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர், 2021மார்ச் 22, அன்று பேஸ்லைன் வீதியில் ஒரு கார் விபத்தை ஏற்படுத்தி, வாகனத்தில் இருந்தவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தாக்கல் செய்த புகாரில், சந்தேக […]

அடுத்த பாப்பரசர் தெரிவுக்கான பெயர் பட்டியல் வெளியீடு!

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது. இந்நிலையில் எட்வர்ட் பென்டின் மற்றும் டயான் மொன்டாக்னா தலைமையிலான கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுயாதீன குழு நடத்தும் வலைத்தளமான The College of Cardinals Report வலைத்தளத்தில் அடுத்து பாப்பரசராகும் வாய்ப்புள்ள 22 கார்டினல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1.Cardinal Fridolin Ambongo Besungu 2.Cardinal Anders Arborelius […]