எகிறது தேர்தல் விதிமீறல்கள்!

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 20ஆம் திகதி வரை 2011 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 137 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1642 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், […]
சுரேஷ் சலேவை நெருங்க அச்சப்படும் புலனாய்வாளர்கள்!

இலங்கை இராணுவ புலனாய்வாளர்களையும், பயங்கரவாத செயற்பாட்டாளர்களையும் இணைக்கும் ஒரு சதித்திட்டம் குறித்து 2023 ஆம் ஆண்டில், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் பொதுமக்களின் கவனத்தைபெற்றதோடு, கேள்விகளையும் வலுவாக்கியது. இலங்கையர்கள் ஏற்கனவே சந்தேகிக்காததை ஆவணப்படம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது அதை சத்தமாகச் சொன்னது. ஆவணப்படத்தின் பெரும்பகுதி ஏற்கனவே இருந்த குற்றச்சாட்டுகளை எதிரொலித்தது. ஆனால் அது அப்போதைய அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலேவைச் சம்பந்தப்பட்டதாகக் கூறும் கூற்றுகளையும் அறிமுகப்படுத்தியது. மேலும் கோட்டாபய ராஜபக்சவின் 2019 ஜனாதிபதித் […]
திருநங்கைகள் தொடர்பில் பாப்பரசரின் நிலைப்பாடு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார். தனது 88ஆவது வயதில் இன்று காலை வத்திகானில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்து, பின்னர் தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில் மறைந்திருக்கிறார். பாப்பரசர் பிரான்சிஸ், ரோம் நேரப்படி காலை 7:35 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக […]
பாப்பரசின் மறைவுக்கு விஜய் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலமானதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் […]
பாப்பரசர் மறைவிற்கு கனடியர்கள் இரங்கல்

உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க மதத் தலைவராகவும், கனடா மக்கள் மனதில் மறக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவராகவும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் நினைவில் நீடிக்கப்போகிறார் கனடிய மக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர். பிறமத இன மக்களுடனான உறவை புதுப்பித்தவர் என்றே மத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். வாடிகன் அறிவிப்பின் படி, 88-வது வயதில் அவர் கடந்த திங்கட்கிழமை உயிர் நீத்ததாக கூறியுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, கனடாவில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.1 கோடியாகும். இது மத […]
வாக்களிப்பதில் கனேடியர்கள் புதிய சாதனை

பொதுத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நான்கு நாட்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை அண்ணளவாக இரண்டு மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்துவரும் நாட்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை கையாளப்போவதாகவும் கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளது. கடந்த 2021 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 5.8 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர். இது 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது 18 சதவீதத்திற்கும் மேற்பட்ட […]
7 மணிநேர விசாரணைக்குப் பின்னர் வௌியேறினார் மைத்திரி

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
சரிவைக் காட்டும் கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (21) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16.96 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,599.61 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது
சக்கரை நோயாளர்கள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டுமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். 100 கிராம் எடையுள்ள மாம்பழத்தில் கிட்டத்தட்ட 60 கலோரிகள், 2 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவிலான சர்க்கரை உள்ளது. மேலும் இதில் விட்டமின்கள் A, B6, C, E, மற்றும் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற […]
இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதியை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.