பிள்ளையான் கைது சந்தேகத்துக்குறியது!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். மேலும், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசாரணை தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையிலும் கோள்வி நிலவுவதாக அவர் தொரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆளும், மற்றும் எதிர் தரப்புக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தான் நன்கு அறிந்தவன் என்றும், இதன் காரணமாக விசாரணைகளின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சக கைதிகளின் தாக்குதலால் நடைபினமானார் பாலியல் குற்றவாளி!

கனடாவில் கைதாகி சிறை வைக்கப்பட்டிருக்கும் இவான் பொலாக் என்னும் பாலியல் குற்றவாளி சிறைக்குள் சக கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி நடைப்பினமாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கைதி தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர் என்று பொலிஸார் கூறுகின்றனர். இவர் அட்லாண்டிக் சிறைக்குள் கத்திக்குத்துக்கு ஆளாகி நடைபினமாகியிருப்பதாகவும் அதனால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் கனேடிய மத்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த தாக்குதலுக்கும் இவரே சூத்திரதாரி என்று கூறப்பட்டிருக்கிறது. இவர் குறித்த சம்பவம் […]
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ’ஏஸ்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, தற்போது மே 23-ம் தேதி ‘ஏஸ்’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் வியாபார பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, […]
ஷிவானியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!

வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த எப்போதும் ஃபோட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சேலையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது. மாடல் அழகியான நடிகை ஷிவானி நாராயணன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். […]
சூழ்ச்சிகளை பகிரங்கப்படுத்தினார் ஜனாதிபதி அநுர!

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய துயரம் 2019 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று (20) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தரை ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதே என்றும் ஜனாதிபதி அநுர அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், 2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், அதைத் தொடர்ந்து வந்த […]
ஈராக்கில் சர்வதேச இராணுவக் கண்காட்சி

ஈராக் இராணுவத்தின் சார்பில் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட 13ஆவது இராணுவக் கண்காட்சியில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த155 நிறுவனங்கள் தயாரித்த இராணுவத் தயாரிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த இராணுவக் கண்காட்சியில், சைபர் பாதுகாப்பு, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான நவீன தொழில்நுட்ப தயாரிப்புக்களையும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இந்தியப் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்யத் திட்டம்

அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் அளவிற்கு அதே வரியை, வரி விதிக்கும் நாடுகள் மீதும் விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதன்படி, கடந்த 9 ஆம் திகதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்தது. வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. பல்வேறு நாடுகளும் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக 90 நாட்களுக்கு வரி விதிப்பை ட்ரம்ப் நிறுத்தி வைத்து இருக்கிறார். இதேவேளை சீனா மீது மட்டும் […]
சுப்மன் கில்லுக்கு அபராதம்!

ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று (19) நடந்த 35ஆவது ‘லீக்’ போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்சை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ ஆகிய 4 அணிகளும் 10 புள்ளியை தொட்டுள்ளது. நிகர ஓட்டங்களின் அடிப்படையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. அந்த […]
பிள்ளையான் அலுவலகத்தில் இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு!

பிள்ளையானின் அலுவலத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு […]
அனுர ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் கிடைக்காது!

அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் வைத்து இன்று (20.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் அவரின் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயோ அல்லது கோட்டாபய ராஜபக்சயோ, மைத்திரிபால சிறிசேன விடமோ […]