சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீர் இராஜிநாமா!

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் மே 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் இங் ஹென், தனது பதவியை இராஜிநாமா செய்ததுடன், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்தோடு மே 3ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் அவர் […]
அமெரிக்க தீர்வை வரி – பேச்சுவார்த்தைக்காக பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெறும் என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தொிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியை சந்திப்பார்கள் எனவும் அமெரிக்காவுடனான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அழகான வாழ்க்கையும் எங்கே? – சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்று பலர் இந்த அரசாங்கத்தை பொய் கூறும் அரசாங்கம் என்றும், ஏமாற்று அரசாங்கம் என்றும், கேவலமான அரசியலில் ஈடுபடும் அரசாங்கம் என்றும் கூறுகின்றனர். 24 மணி நேரமும் பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம் மக்களை திசைதிருப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளினால் சிலர் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்றுறையை ஊக்குவிக்கப்புக்கான 05 முக்கிய அறிவிப்புகளை விடுத்தார் தமிழக முதல்வர்

இந்தியாவின் தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் 05 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை குன்றத்தூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, முதல் திட்டம், புவிசார் குறியீடு பெறும் பொருள்களுக்கான மானியம் 25000 ரூபாவிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இரண்டாவது, அம்பத்தூரில் 5 கோடி ரூபாவில் வாகன மற்றும் உலோகவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். மூன்றாவது, காஞ்சிபுரத்தில் பழதண்டலத்தில் சாலைக் கட்டமைப்பு, மழைநீர் வடிகால்வாய் போன்ற […]
நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி!

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து பெரும் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து அனைவரின் கவலைக்கும் அவர் பதிலளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது […]
பிரியங்காவின் கணவர் ஈழத் தமிழர்!

பிரபல இந்திய தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர். மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார். அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார். […]
203 ஓட்டங்களை துறத்திப்பிடித்து குஜராத் அபார வெற்றி!

18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றது. அதன்படி, மாலை 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை […]
தேயிலை லொரி விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்!

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி இந்த போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.