150 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் அடங்கிய இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் சுயிங்கம் என்பன மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 12.677 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மற்றும் 1.852 கிலோகிராம் ஹஷிஷ் வகை போதைப்பொருள் ஆகியன உள்ளடங்கி இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் அடங்கிய இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் சுயிங்கம் என்பன இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகச் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.