அமெரிக்காவின் புதிதாக நியமிக்கப்பட்ட சிரிய தூதர் தாமஸ் பராக் , டமாஸ்கஸுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, இஸ்லாமியவாதிகள் தலைமையிலான அரசாங்கத்தைப் பாராட்டி சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதியை அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
2012 இல் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதிலிருந்து முதல் முறையாக தூதரகத்தில் தாமஸ் பராக் அமெரிக்கக் கொடியை உயர்த்தினார்.
சிரியா இனி அமெரிக்காவால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகக் கருதப்படாது என்றும், “அசாத் ஆட்சி முடிந்தவுடன் பிரச்சினை போய்விட்டது” என்று பராக் தெரிவித்தார்.
“அமெரிக்காவின் நோக்கமும் ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையும் என்னவென்றால், இந்த அரசாங்கத்தில் தலையிடாமல், , நிபந்தனைகளை வழங்காமல், உங்கள் கலாச்சாரத்தின் மீது எங்கள் கலாச்சாரத்தைத் திணிக்காமல் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாகும்” என்று பராக் தெரிவித்தார்.