100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, 400 தொன் தரமற்ற முருக்கு கம்பிகள் பறிமுதல்!

தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றுக்கு கொண்டு செல்லப்படுவதை திகாரிகளால் கண்டறிந்துள்ளனர்.

குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பின்தொடர்ந்த அதிகாரிகள் கடந்த 06 ஆம் திகதி அந்தக் களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அந்த இடத்தில் சுமார் 400 தொன் என மதிப்பிடப்பட்ட முருக்கு கம்பிகள் களஞ்சியசாலையில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டதுடன், இந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முற்றுகை தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை மூலம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு தொடரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு