ஹவார்ட் பல்கலைக்கழக விவகாரத்தில் ட்ரம்பின் அரசாங்கத்தின்மீது சீன அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் சர்வதேச அங்கீகாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என சீன அரசு விமர்சித்துள்ளது.
ஹவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது பல்கலைக்கழகத்தில் இணைந்து அவர்களது கல்வியைத் தொடரலாம் என்று ஹொங்ஹொங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துக்கொடுப்பதுடன் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படும் எனவும் அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.