கனடியர்களால் மாத்திரமல்ல உலகெங்கும் வாழும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட கனடியத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று லிபரல் கட்சியின் அரசாங்கமானது இன்னும் சில நாட்களில் பதவியேற்கவுள்ளது.
கடந்த 28ம் திகதி நடைபெற்ற மேற்படி கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் தனது Scarborough Guildwood-Rouge Parkதொகுதியிலிருந்து அதிக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் நிச்சயமாக புதிதாக பதவியேற்கவுள்ள Mark Carney’யின் அமைச்சரவையில் ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக நியமிக்கப்படுவார் என நம்பப்படுகிறது.
இந்த தேர்தலில் டொரண்ரோ பெரும்பாகத்தில் வெற்றி பெற்ற பல லிபரல் கட்சியின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.