வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க