ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ‘வெல்லே சாரங்க” என்ற கமகே பிரதீப் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்வதற்கான சிவப்பு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முகத்துவாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.