வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இன்று (24) விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொரியின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.