பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வோல்டன் வீதியில் பலத்த வெடிச்சத்தங்கள், சைரன்கள் கேட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்..
வெடிப்பின் தன்மை மற்றும் இடத்தை ஆராய்ந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
வியாழக்கிழமை காலை லாகூரில் உள்ள வோல்டன் வீதியில் தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லாகூரில் உள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் உள்ள வால்டன் வீதியில் பல குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்தன.