வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளைக் குறைக்க வலுவான சட்டங்கள் இருப்பதாகக் கூறிய அமைச்சர், சட்டத்தைப் பின்பற்றாத பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொத்மலை பஸ் விபத்துகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் பெறப்படும் எனவும் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.