நடிகர் விமல் தன் வாழ்வின் வரம் போல வந்தவர் என நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி “@ActorVemal என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர். உண்மையான நண்பனும், உறவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார்.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரே ஒரு காட்சிக்காக, எதையும் எதிர்பார்க்காமல்
அன்புக்காக வந்தது — அவருடைய மனிதத்தன்மையைச் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு.
அவருடைய தோற்றம் மாமன் படத்துக்கு கிடைத்த ஒரு magical gift.
அந்த சிறு காட்சி, எப்போதும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கும்.
உங்களுடைய அன்புக்கும், நேர்மையான மனதுக்கும்,
எங்களுக்காக எடுத்த நேரத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்ற நண்பர் என் வாழ்க்கையில் இருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம்.” என பதிவிட்டுள்ளார்.