தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல் முடிந்த பின்னர், நவம்பருக்குப் பிறகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக மீண்டும் செயல்படுவது பற்றி தீர்மானிக்கவுள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்