விஜய் எதிரியில்லை அவர் என் அண்ணண்! -விஜய பிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தேமுதிகவுக்கு புத்துயிரூட்ட விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் நீண்ட நாள் கோரிக்கை. சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் தேமுதிக இளைஞரணிச் செயலாளராக விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் ஆக்டிவாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த உள்ளோம். தேமுதிகவை கட்சி ரீதியாக பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கூட்டணி குறித்து நிச்சயம் தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.

தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். விஜய் ஒன்னும் எதிரி இல்லையே விஜய் அண்ணன் தானே. விஜயகாந்த் குருபூஜை சமயம் மற்றும் கோட் திரைப்படத்தின் போது அவரை சந்தித்துள்ளேன். கூட்டணி விஷயங்கள் குறித்து அவரிடம் பேசியதில்லை” என்று தெரிவித்தார்.

விஜய்யின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு, “அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு 33 வயதுதான் ஆகிறது, அண்ணனுக்கு 50 வயது ஆகிறது. அவர் என்னை விட சீனியர். அவருக்கு அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்து பல லட்சம் இளைஞர்கள் அவர் பின்னால் இருப்பது அவருடைய பலமாக பார்க்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “கேப்டன் விஜயகாந்த் இல்லை என்கிற மன வருத்தம் எங்களுக்கு உள்ளது. ஆனாலும் அவருடைய ஆசையையும் கொள்கையையும் வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அதனை விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பிப்போம்” என்று தெரிவித்தார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்