வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்..!

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கமல் அமரசிங்க தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க