வவுனியா தோல்விக்கு சந்தியலிங்கமே காரணம்!

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை. விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது. இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம். சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள். கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என. நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும். தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில் இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.

சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம். அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.

குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம். இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம். இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை. அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.

அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி. முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.

சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது. புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள். அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க