வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வன வளத்திணைக்களத்தினால்  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்ட விரோத முறையில் கடத்தமுற்பட்ட முதிரைமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் பற்றிதெரியவருவதாவது,  வனவளத் திணைக்கள த்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி அஜித்ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் மாவட்ட வன வளஅதிகாரி உடார சஞ்சீவவின் தலைமையிலான வன வள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேடஅதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேடநடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப்ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது. இதே வேளை வவுனியாவில் உள்ள மரக்கிளையில் இருந்து அனுமதிபெறப்படாமல் 13 இலட்சம் பெறுமதியான தேக்குமரபலகைகள் மீட்கப்பட்டதுடன், பறய நாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்,காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவங்கள்  தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை (11) அன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க