வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மே 13 ஆம் திகதி வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவல் அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகு அவர் மேற்கொள்ளவுள்ள முதல் பெரிய வெளிநாட்டுப் பயணமாக இந்தப்பயணம் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, ​​அவர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டாரில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை ரியாத்தில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொள்வார்.

இதுவேளை இச்சந்திப்பின் போது அமெரிக்க பொருளாதாரத்திற்கான புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்வது குறித்த விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பு கட்டாரில் நடைபெறும் வளைகுடாத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க