லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கடற்படையினர் கட்டுப்பாட்டில்!

போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததது. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரை அனுப்பி வைத்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆளுநர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தைச் செய்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு